ஜனவரி 31-ல் தொடங்கி பிப்.9 வரை நடைபெறவுள்ளதாக தகவல்

Update: 2024-01-12 07:40 GMT

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் வருமான வரி வரம்புகளில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்