நேரம் பார்த்து பகை முடித்த இந்தியா.. சிதையும் ஆஸி.யின் கோப்பை கனவு..?
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கான அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் இடத்தில் வங்கதேசம் அணி உள்ளது. குரூப் ஒன் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால், நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அதேசமயம், ஆப்கானிஸ்தான் வீழ்த்தப்பட்டால், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், வங்கதேசம் அணி வெற்றி பெற வேண்டும் என ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். குரூப் 2 பிரிவில் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.