இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-08-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" நூல் வெளியீடு.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்...
தொடர் தேர்தல் வெற்றியே முதல்வர் ஸ்டாலினின் ஆளுமைக்கு சான்று என நடிகர் ரஜினிகாந்த் பேச்சு..அமைச்சர் துரைமுருகன் போன்ற பழைய மாணவர்களை முதல்வர் சமாளித்து வருவதாகவும் பாராட்டு....
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்..... நாசா மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் அறிவிப்பு.....
கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு.... பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்....
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் நடந்த ஆன்மிக இசைக்கச்சேரியில், பக்திப் பாடல்களை பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்...இசைக்கச்சேரியில் முருகன் பாடல்களை பாடி அசத்திய குழந்தைக்கு குவிந்த பாராட்டு...
மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என அமைச்சர் சக்கரபாணி விளக்கம்.... மக்களவை தேர்தலுக்கு பின், குடும்ப அட்டை தொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்...
மயிலாடுதுறை அருகே திருவாலங்காட்டில் வாணவெடி தயாரிக்கும் போது நடந்த வெடிவிபத்து.... பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு...
நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு...