பர்ஸ்ட் நைட் ரூமில் நடந்த விபரீதம்.. ரத்த வெள்ளத்தில் மயங்கிய மணமகன், மணமகள்

Update: 2024-08-08 10:31 GMT

கர்நாடகாவில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி திருமணமான சில மணி நேரங்களிலேயே ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலார் தங்கவயல் செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார்-லிகிதாஸ்ரீ காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. இருவீட்டார் சம்மதத்துடன் ஆண்டர்சன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டில் கலகலப்பாக இருந்த தம்பதி...ஓய்வெடுக்க படுக்கையறை சென்ற போது...நவீன்குமார்-லிகிதாஸ்ரீ இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது... தகராறாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர்... அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் குடும்பத்தினரால் தடுக்க முடியவில்லை. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்த நிலையில் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்... ஆனால் போகும் வழியிலேயே லிகிதாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். நவீன்குமார் தீவிர சிகிச்சையில் உள்ளார்... காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்