கண்ணில் விரலை விட்டு ஆட்டும் EDஐ... கோர்ட் படியேறி இறங்க விட்ட ஹேமந்த் சோரன்
ஹேம்ந்த் சோரன் கைதான விவகாரத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்த கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
நில மோசடி தொடர்பான வழக்கில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் வீட்டில் கடந்த வாரம் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். இந்நிலையில் தனக்கும், தான் சார்ந்த பழக்குடியின சமூகத்தையும் அலைக்கழித்து, அவதூறு செய்யும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டதாக ஹேமந்த் சோரன் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் ராஞ்சி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமலாக்கத் துறை சார்பில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.