கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.
நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.