இதற்காக, வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்களின் வசதிக்காக, தண்ணீர், ஷாமியானா மற்றும் மின்விசிறி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடி மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் என 364 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுப்பதற்காக, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.