எல்ஃபின் நிதி நிறுவன இயக்குனர் கைது... 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்...

Update: 2023-07-30 00:33 GMT
  • எல்பின் ராஜா சில வருடங்களுக்கு முன்பு தர்மத்தின் தலைவனாக... வாரிக்கொடுக்கும் வள்ளலாக... மக்கள் அரசனாக... பாமர மக்கள் தலையில்தூக்கி வைத்து கொண்டாடினார்கள்… ஆனால், இதே நபரை தற்போது போக்கிரி ராஜா, forgery raja, என கண்டப்படி கழுவி ஊத்திக்கொண்டிருக்கிறார்கள்.
  • ஊருக்கு மத்தியில் பிரம்மாண்ட மீட்டிங்... தடபுடலான அசைவ விருந்து... சொகுசு கார் ஊர்வலம்... என ஒருகாலத்தில் கெத்தாக வலம் வந்தவர் தான் இந்த எல்பின் ராஜா. இவருக்கு வலது கரமாக இருந்தவர் அவருடைய தம்பி ரமேஷ் குமார்.
  • இவர் நடத்திய நிதி நிறுவனத்தின் பெஸ்ட் பெர்பார்மர்களுக்கு பம்பர் கார்... தங்க சங்கிலி... பாரின் ட்ரீப்... சொந்த வீடு... அக்கவுண்ட் நிறைய பணம்... என வாயடைத்து போகும் அளவிற்கு சகல செளபாக்கியங்களும் கிடைத்ததும் உண்மை தான்.
  • ஆனால், இந்த பில்டப்களை நம்பி எல்பின் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த அனைவரும் தற்போது விபூதி அடிக்கப்பட்டிருக்கிறது.
  • ஆம், பணம் இரட்டிப்பு... Money Clowning... பிளாக்கை வொய்ட்டாக மாற்றும் Money Laundering என வாடிக்கையாளர்களிடம் இவர்கள் அளந்துவிட்ட வாக்குறிதிகளிடம் அரசியலாவாதிகளே தோற்றுவிடுவார்கள் என்றே தான் சொல்ல வேண்டும்.
  • அந்த அளவிற்கு, ஆசையை தூண்டி, மூளை சலவை செய்து பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி முதலீடுகளை வாரி குவித்தது எல்பின் நிதி நிறுவனம். இப்படி பிரைட்டாக பணத்தை அள்ளிய இரண்டு சகோதரர்களும் தற்போது டைட்டாக காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அண்ணன் ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது தம்பி ரமேஷ் குமார் புது மோசடி வழக்கில் சிக்கி கைதுச் செய்யப்பட்டிருக்கிறார்.விருது நகர் மாவட்டம் ,சாத்தூரை சேர்ந்தவர்கள் அழகர்சாமி என்ற ராஜா மற்றும் ரமேஷ்குமார். இவர்கள் இருவரும் 2013 முதல் 2015 ஆம் ஆண்டுவரை பணமோசடி வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்தனர். பிறகு இவர்கள் உள்ளூரில் கடையை காலிச் செய்துகொண்டு திருச்சி மாவட்டம் , மன்னார்புரத்திற்கு குடியேறியிருக்கிறார்கள்.
  • அங்கு எல்பின் என்ற பெயரில் நிதி நிறுவனங்களை தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தின் கிளை மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம் , திருப்பூர் , புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எல்ஃபின் நிறுவனத்தின் கீழ் அரம் மக்கள் இயக்கம் , அரம் டிவி உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்களும் செயல்பட்டு வந்தது.
  • ஒருலட்சம் கொடுத்தால் அடுத்த மாதமே இரண்டு லட்சமாக பணத்தை இரட்டிப்பு செய்து தறுவதாக இவர்கள் கொடுத்த கவர்ச்சி விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை நம்பி பலரும் ஏஜன்ட்டுகள் மூலம் லட்சங்களில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், எல்ஃபின் நிறுவனம் முதலீட்டாளர்களின் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர்.
  • இதனால் எல்ஃபின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் குவிக்கப்பட்டது. இதனால் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு எல்ஃபின் நிறுவன இயக்குனர்கள் ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைதுச் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
  • இந்தசூழலில்தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜா என்கிற அழகர்சாமி நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக மீண்டும் கைதுச் செய்யப்பட்டார். அவரது 257 சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. கோசடி முக்கிய புள்ளிகளில் ராஜாவை அடுத்து தற்போது காரைக்கால் காவல்துறையினர் பணமோசடி வழக்கில் ரமேஷ்குமாரை கைதுச் செய்திருக்கிறார்கள்.
  • காரைக்கால் மாவட்டம் வளத்தெருவை சேர்ந்தவர் முருகேஸ்வரி என்பவர் 2018ஆம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ஏஜன்டுகள் மூலம் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
  • பிறகு சிறுக சிறுக ஆறுகோடி ரூபாய் வரை முதலீட்டு பணத்தை செலுத்தியிருக்கிறார் முருகேஸ்வரி. அப்போதுதான் எல்ஃபின் நிறுவனம் மோசடி வழக்கில் சிக்கியதை கவனித்த முருகேஸ்வரி தனக்கு சேரவேண்டிய பணத்தை திரும்ப கொடுக்குமாறு ஏஜன்டுகளிடம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டலே மிஞ்சியிருக்கிறது.
  • இதனால் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஏஜன்டுகள் மீதும் எல்ஃபின் நிறுவன இயக்குனர்கள் மீது புகார்கொடுத்திருக்கிறார் முருகேஸ்வரி. சமீபத்தில் மதுரை மத்திய சிறையிலிருந்து நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ்குமார் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்துள்ளார். அப்போது ஸ்பாட்டில் ரெடியாக இருந்த காரைக்கால் தனிப்படை போலீசார் ரமேஷ்குமாரை அதிரடியாக கைதுச் செய்திருக்கிறார்கள்.
  • முருகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் ரமேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்