டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசுவதாலும், ஹரியானா அரசு தேவையான தண்ணீரை விடுவிக்காததாலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதிகப்படியான தண்ணீரை வீணடித்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் டெல்லி அரசு சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சாணக்யபுரி பகுதியில் தண்ணீர் லாரி வந்த நிலையில், அப்பகுதி மக்கள் முண்டியடித்துக் கொண்டு லாரியின் மீது ஏறி தண்ணீர் பிடித்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.