டெல்லியில் 3 மாணவர்கள் பலி...அரசு அதிகாரிகள் பலருக்கு தொடர்பு? - கோர்ட் போட்ட உத்தரவு
டெல்லியில் பயற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லி பழைய ராஜேந்தர் நகரில், பயிற்சி மையத்தின் தரைத்தளத்தில் வெள்ளம் புகுந்ததால், 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை உயர்நிலை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. வழக்கின் தீவிர தன்மையை வைத்து பார்க்கும் போது, அரசு அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது தெரிய வருவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கண்காணிக்கும் வகையில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.