"கையெழுத்து போட முடியாதா?" - கெஜ்ரிவாலுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

Update: 2024-09-06 15:23 GMT

சிறை கைதிகள் தண்டனை குறைப்பு கோப்புகளில் டெல்லி துணை நிலை ஆளுநர் கையெழுத்திட்டதும், முதல்வர் கையெழுத்தும் அவசியமாகிறது. இப்போது அவரே சிறையில் இருப்பதால் கையெழுத்திட முடியாத சூழல் இருப்பதாக கைதி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திட முடியாதா? என டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியது. இது குறித்த விதியை தெரிவிக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தும் என்ற நீதிபதிகள், தண்டனை குறைப்பு மனுக்களை கிடப்பில் போட முடியாது என்றனர். டெல்லி அரசு வழக்கறிஞர் விளக்கம் தெரிவிப்பதாக கூறிய சூழலில், உச்சநீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்