உருக்கும் - 200º குளிர்... இன்றுடன் முடியும் இரவு..! மறுபிறவி எடுக்குமா சந்திரயான் -3?

Update: 2023-09-22 13:21 GMT

நிலவில் 14 நாட்களாக மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உறைந்து கிடந்த லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறக்கப்பட்ட சந்திராயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 4 வரை 12 நாட்களாக பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. வெப்பநிலை வேறுபாடு, நில அதிர்வுகள் மற்றும் ஆக்சிஜன் உட்பட எட்டு வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்த‌து. அதன்பின், பகல் முடிவடைந்த‌தால், கடந்த 4ஆம் தேதி பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, உறக்க நிலைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இரவு பொழுது இன்றுடன் நிறைவடைந்து சூரிய கதிர்கள் விழத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, லேண்டர் மற்றும் ரோவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. 14 நாட்களாக மைனஸ் 200 டிகிரி செல்சியஸில் உறைந்து கிடந்த லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள பேட்டரிகள் மீண்டும் வேலை செய்யுமா? என கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை செயல்பட தவறும் பட்சத்தில், இந்தியாவின் தூதுவராக' செயலற்ற நிலவின் நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்