166 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, ரயில்வே வாரியத்தின் தலைவராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார்...
இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இவர் ரயில்வே வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாட்டு பிரிவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்திய ரயில்வேயில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர், பல்வேறு முக்கிய பதிவிகள் வகித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக இவர் பணியாற்றியபோது, கொல்கத்தாவில் இருந்து டாக்கா செல்லும் புகழ்பெற்ற மைத்ரி விரைவு ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.