வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் பட்ஜெட் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார். வீட்டில் சோலார் தகடு அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்ததற்காக நன்றி தெரிவித்த அண்ணாமலை, 2019-20 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு 11 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 22 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.