"பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது"

Update: 2023-08-08 03:08 GMT

காணொலி காட்சி மூலம் உரையாற்றி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் அரசில் முரணான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். இதன் மூலம், டெல்லி மக்களின் வாக்குகளையும், உரிமைகளையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மக்களுக்காக உழைக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், அவர்களின் உரிமைகளை பறிப்பதற்காக அல்ல என கூறினார். அவசர சட்டத்திற்கு எதிராகவும், தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்பது கடினாக இருப்பதால், குறுக்கு வழியை தேர்ந்தெடுத்திருப்பதாக விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், டெல்லியில் பாஜக ஒரு தொகுதில் கூட வெற்றி பெறாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்