பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ கார் மீது தாக்குதல்

Update: 2023-10-28 17:23 GMT

மேற்குவங்கத்தில், பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ. ஸ்ரீரூபா மித்ர சவுத்ரி, கட்சித்தொண்டர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், தனது கார் மீது, பைக்கில் வந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார். கார் கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக தனக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்