தூங்குறதுக்கு 9 லட்சம் பரிசா.. எங்கே தெரியுமா? - உடனே கிளம்புங்க மக்களே

Update: 2024-09-27 12:21 GMT

பெங்களூருவை மையமாகக் கொண்ட மெத்தை தயாரிக்கும் நிறுவனம், தங்கள் மெத்தைகளை விளம்பரம் செய்யவும், நல்ல ஓய்வின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்ற போட்டியை நடத்தியது. இதன்படி மதியம் சாப்பிட்ட பிறகு 20 நிமிடம் தூங்க வேண்டும்... அதேபோல் இரவு 8 முதல் 9 மணி நேரம் வரை உறங்க வேண்டும்... இப்படி தினசரி 30 நாட்களுக்கு செய்பவர்களே வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். 12 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவர்கள். இதில் பெங்களூருவைச் சேர்ந்த சாயிஷ்வரி என்பவர், முதல் பரிசான ஒன்பது லட்சம் ரூபாயை தட்டிச் சென்றார். நல்ல தூக்கத்தைப் பெற ஒழுக்கம் தேவை என்றும், இத்தகைய போட்டிகளில் வெற்றிபெற வழக்கமான தூக்க நேரத்தை உருவாக்க வேண்டும்...இரவில் மொபைல் மற்றும் டிவி பார்ப்பதை குறைக்க வேண்டும் என்று சாயிஷ்வரி அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்