திருப்பதி கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு.."இனி 6 To 6 மட்டும் தான்" - தவறினால் விபரீதம் எச்சரிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒலிப்பெருக்கி மூலம் நடைபாதை முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
அலிபிரி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் குடும்பத்தாருடன் சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் குதறிக் கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது... இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கியுள்ள நிலையில், மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதியில் வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனால் திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அடிவாரத்தில் பக்தர்களை ஒன்றிணைத்து, பத்துக்கும் மேற்பட்டவர்கள் குழுவாக செல்லுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். நடைபாதை முழுவதும் ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே திருமலைக்கு பாதையாத்திரையாக நடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.