நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்... உள்ளே சிக்கிய 22 இந்தியர்கள் - செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்

Update: 2024-01-28 02:51 GMT

காசா போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சிக்குழு, ஏடன் வளைகுடாவில் வணிக கப்பல்கள் மீது அவ்வப்போது ஏவுகணைகளை வீசி வருகிறது. அந்தவகையில் வளைகுடாவில் நகர்ந்த மார்லின் லுவாண்டா பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர் குழு ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இதில் கப்பல் தீப்பிடித்து எரியவும், இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஏவுகணை அழிப்பு கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கப்பலை இந்திய கடற்படை அனுப்பியது. விரைந்து சென்ற இந்திய கப்பல், வணிக கப்பலில் தீயை அணைக்க உதவியது. இந்திய கடற்படை வீரர்கள் 6 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கப்பலில் இருந்த 22 இந்திய பணியாளர்களும் பத்திரமாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்லின் லுவாண்டா டேங்கர் கப்பல் பத்திரமாக நகர தொடர்ந்து ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கப்பல் உதவி வருகிறது என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்து ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பு பணியிலிருந்த அமெரிக்கா, பிரான்ஸ் கப்பல்களும் எண்ணெய் கப்பலுக்கு உதவியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்