வாக்குப்பதிவின் போது ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்திரியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களிடையே மோதல் எழுந்தது... கல்வீச்சு சம்பவங்களும் நடந்த நிலையில், போலீசார் அதைத் தடுக்க தடியடி நடத்தினர்... அப்போது பலர் காயமடைந்தனர்... நிலைமை கையை மீறிச் சென்றதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி தொண்டர்களை விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.