தனியார் ஹோட்டலில் நடந்த விபத்து - ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

Update: 2023-09-12 08:02 GMT

புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் கட்டிட வேலை செய்துகொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.

தைலாபுரம் ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன்,அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன், அய்யப்பன் ஆகியோருடன், புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஒன்றில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து, 3 பேரின் மீது விழுந்தது. இதில் மோகன் படுகாயம் அடைந்தார். ஜெகன், அய்யப்பன் ஆகியோர் லேசான காயமும் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயம் அடைந்த மோகன் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இலேசான காயமடைந்த ஜெகன், அய்யப்பன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். போலீசார் ஹோட்டல் உரிமையாளர்கள் இலியாஸ், வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்