142 ஆண்டுகளுக்கு பின்..பூமிக்கு அடியில் இருந்து வந்த தங்கபாம்பு
தங்கக் கவசவாலன்' என்ற அரிய வகைப் பாம்பை, 142 ஆண்டுகளுக்கு பின்னர், மனிதர்கள் தற்போது மீண்டும் கண்டுள்ளனர்.
கேரளா மாநிலம், வயநாடு அருகே செம்பரா மலைப்பகுதியில் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் 'தங்கக் கவசவாலன்' என்ற அரிய வகைப் பாம்பை கண்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக 1880-ஆம் ஆண்டு, வயநாடு பகுதியில் உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் என்பவர் இந்த தங்கக் கவசவாலன் பாம்பை முதன்முதலில் கண்டார்.
இந்த வகைப் பாம்புகள் பூமிக்கு பல அடி ஆழத்தில் வசிப்பவை.
இரவு நேரத்தில் மட்டுமே இரை தேடும் இந்த வகை பாம்புகளுக்கு பார்வைத் திறன் மிகத் துல்லியமாக இருக்கும்.
https://youtu.be/2IEvMt7GOZgமிக அரிய வகைப் பாம்பாக அறியப்பட்டு வந்த தங்கக் கவசவாலன் பாம்பை, தற்போது பிடித்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.