சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 விண்கலத்தின் மூளையும் தமிழர் தான்..! - யார் இவர்?

Update: 2023-09-01 05:02 GMT

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி பணியாற்றி வருவது, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோ, அடுத்து சூரியன் குறித்து ஆய்வு செய்ய, ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவவுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க இருக்கும் இந்த ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இயக்குனராக, நிகர் சாஜி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற நிகர் சாஜி, இளநிலை பொறியியல் படிப்பினை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பயின்றார். தற்போது அவர் பெங்களூருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சூரியனை ஆராயும் திட்டத்தின் இயக்குனராக நிகர் சாஜி பணியாற்றுவது, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்