இந்தி பிக்பாஸ்-ல் நுழைந்த நடிகை ஸ்ருதிகா!

Update: 2024-10-09 22:27 GMT
  • பிக்பாஸ் தமிழில் அதிரடி என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதிகா, இந்தி பிக்பாஸில் நுழைந்து ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதிகா...
  • பழம்பெரும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருதிகா, பள்ளி பருவத்திலேயே படங்களில் நடித்துள்ளார்..
  • ஆல்பம், ஸ்ரீ, நளதமயந்தி உள்ளிட்ட 4 படங்களில் நடித்திருந்தாலும், பெரிதாக சோபிக்கவில்லை இவர்...
  • இருப்பினும், அப்போது விட்டதை, தற்போது சின்னத்திரையில் பிடித்திருக்கிறார் ஸ்ருதிகா..
  • சமீப காலமாக யூட்யூப் பேட்டிகள் உள்ளிட்டவைகளால் பிரபலமாக இருந்த ஸ்ருதிகா, தமிழ் பிக்பாஸில் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதிரடியாக இந்தி பிக்பாஸ்-ல் என்ட்ரி கொடுத்துள்ளார்...
  • சல்மான் தொகுத்து வழங்கும் 18வது சீசன் இந்தி பிக்பாஸ்-ல் பங்கேற்றுள்ள அவர், தொடக்கத்திலேயே வணக்கம் கூறி ரசிகர்களை கவர...அடுத்தடுத்து சுட்டித்தனத்தால் இந்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்...
  • தொடக்கத்தில் ஸ்ருதிகாவிற்கு இந்தி ரசிகர்களும், பிக்பாஸ் ஹவுஸ் மேட்-சும் பெரிதளவில் வரவேற்பு கொடுக்காத சூழலில், தனது சுட்டித்தனமான பேச்சால் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்...
  • தமிழ் ரசிகர்களுக்கே போரடிக்கும் வகையில் பல முறை தனது காதல் கதைகளை கூறிய ஸ்ருதிகா, இந்தி பிக்பாஸிலும் அதையே தொடர்ந்து செய்து வருகிறார்...
  • தமிழில் தனது பேச்சால் ரசிகர்களை கவர்ந்த அவர், இந்தியிலும் ரசிகர்களை ஈர்க்க தொடங்கிவிட்டார் என்றே கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்..
Tags:    

மேலும் செய்திகள்