திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.