கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே கேரள அரசுப்பேருந்து உரசியதில் லாரியின் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்ததால், லாரி ஓட்டுநர் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை கழட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மூகாம்பிகை நோக்கி சென்ற கேரள அரசு பேருந்து, உடுப்பி அருகே சென்ற போது லாரி ஒன்றை உரசிச் சென்றதில் அதன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி ஒட்டுநர், பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை கழட்டி சென்றார்.