சிதைக்கப்பட்ட உடல்; ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன்..! நம்பிய நண்பர்களே நிகழ்த்திய அதிகொடூரம்
கர்நாடக மாநிலம் சாமனஹள்ளி பகுதியில், சிறுவன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 17 வயதுடைய சிறுவனின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுவனை அவரது கூட்டாளிகள் 7 பேர் அரசு பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்று, சட்டையை கழற்றி கூரிய ஆயுதங்களை கொண்டு கொடூரமாக சித்தரவதை செய்ததும், இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும் 8 மாதங்களுக்கு முன் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாதற்காக இந்த கொலை அரங்கேறியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வேறொரு கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் ஒருவரின் மகன் உட்பட 7 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.