தண்டவாளத்தில் மின்னல் வேக ரயில்.. குறுக்கே வந்த குருவாயூர் கோயில் யானை -நொடியில் நடந்த தெய்வ அதிசயம்

Update: 2024-02-27 04:25 GMT

கேரள மாநிலத்தில், கோயில் திருவிழாவின் போது யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குருவாயூரில் உள்ள கோயில் ஒன்றில் யானை மீது சாமி எழுந்தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது ஊரை சுற்றி வலம் வந்த யானை ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது திடீரென பயணிகள் ரயில் வந்தது. இதனால் யானையை உடனடியாக பாகன்கள் மற்றும் அங்கிருந்தவர், தண்டவாளத்தை வேகமாக கடக்க செய்தனர். அப்பொழுது யானையின் மீது 4 பேர் அமர்ந்திருந்தனர். யானை தண்டவாளத்தை கடந்த சில நொடிகளில், அந்த பகுதியை பயணிகள் ரயில் கடந்து சென்றது. யானை உடனடியாக தண்டவாளத்தை கடந்து சென்றதால் பெரும் அசாம்பவிதம் தவிர்க்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்