திருப்பதி மலைக்கு தனியே சென்ற சிறுமி...கவ்வி சென்று கடித்து குதறிய கரடி - அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-08-12 12:07 GMT

திருப்பதி மலைக்கு தனியே சென்ற சிறுமி...கவ்வி சென்று கடித்து குதறிய கரடி - அதிர்ச்சி சம்பவம்

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற 6 வயது சிறுமியைக் கரடி கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் நெல்லூர் போத்தி ரெட்டிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி லக்ஷிதா நேற்று இரவு பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து அலிப்பிரி நடைபாதை வழியாக திருமலைக்கு பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்தார். இடையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே சிறுமியை திடீரென காணவில்லை. தகவலறிந்து வந்த விஜிலன்ஸ் துறையினர், வனத்துறையினர், மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை உடல் முழுதும் பலத்த காயங்களுடன் சிறுமி அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளை தேவஸ்தானம் வெளியிட்ட நிலையில், அதில், சிறுமியை தனியே விட்டு விட்டு உறவினர்கள் பெற்றோர்கள் கும்பலாக நடந்து செல்வதும் பதிவாகி இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட கரடி தனியாக நடந்து சென்ற சிறுமியை இழுத்துச் சென்று கடித்துக் குதறி கொன்று தின்றது.

சேஷாசலம் வனப்பகுதியில் தற்போது அதிகளவிலான கரடிகள் உள்ளதால் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் சிறுவன் சிறுத்தையால் தாக்கப்பட நிலையில், மறுநாள் அச்சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்