மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்

குஜராத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பெண்ணிற்கு பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-21 10:49 GMT
மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்

குஜராத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பெண்ணிற்கு பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சம் மாவட்டம் போலாசாரா கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவரத்திற்காக தபாஸ்வினி என்ற பெண் வந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஜனரேட்டர் உதவியும் இல்லாததால், செல்போனின் டார்ச் லைட் மற்றும் மெழுகு வர்த்தி ஒளியில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். தபாஸ்வினிக்கு ஆண்குழந்தை பிறந்ததாகவும், இருவரும் நலனுடம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்