இஷ்டம் போல் நடந்து கொள்வீர்களா ? - பிட்காயின் இணை நிறுவனருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிட்காயின் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த பிட்காயின் இணை நிறுவனரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

Update: 2022-04-18 14:34 GMT
பிட்காயின் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த பிட்காயின் இணை நிறுவனரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த கிரிப்டோ காயின், பிட்காயின் இணை நிறுவனர் அஜய் பரத்வாஜ் தாக்கல் செய்த ரிட் மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, பிட்காயின் வழக்கில் அமலாக்கத் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அஜய் பரத்வாஜுக்கு உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கிரிப்டோ பயனாளர் பெயர், கடவுச்சொல்லை அமலாக்கத்துறையிடம் ஏன் வழங்கவில்லை? என கேள்வி எழுப்பினர். இஷ்டம் போல் நடந்து கொள்ள உச்சநீதிமன்றம் ஒன்றும் மாவட்ட நீதிமன்றம் இல்லை என்றும் நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்