"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்".. சைக்கிளில் டெலிவரி செய்த ஆசிரியர் - சர்ப்ரைஸ் கொடுத்த இளைஞர்
ராஜஸ்தானில் கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்த ஆசிரியருக்கு, 4 மணி நேரத்தில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாய் டிவிட்டர் பயனாளர்கள் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்த ஆசிரியருக்கு, 4 மணி நேரத்தில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாய் டிவிட்டர் பயனாளர்கள் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெருக்கும் நிலையில், ஒருவர் சைக்கிளில் ஜொமேட்டோ சார்பில் உணவு டெலிவரி செய்து வந்துள்ளார். பி.காம் படித்த அவர் கொரோனாவுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றி வந்ததாகவும், லாக்டவுனால் வேலையிழந்து ஜொமேட்டாவில் உணவு டெலிவரி செய்வதாகவும் கூறியுள்ளார். கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்வதால் ஆசிரியருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்த உதவுமாறு சமூக வலைதளத்தில் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். அடுத்த 4 மணி நேரத்தில் டிவிட்டர் பயனாளர்கள் 75 ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக அளித்துள்ளனர். அந்த தொகையில் ஆசிரியருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் உள்ளவர்களின் அக்கறையும், பொதுநலமும் ஆசிரியருக்கு உதவியதாக பலரும் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.