அசைவ உணவு சமைக்க எதிர்ப்பு - ஜே.என்.யூ வளாகத்தில் பரபரப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அசைவ உணவு உண்ணச் சென்ற மாணவர்களை ஏ.பி.வி.பி. அமைப்பினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-11 02:27 GMT
அசைவ உணவு சமைக்க எதிர்ப்பு - ஜே.என்.யூ வளாகத்தில் பரபரப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அசைவ உணவு உண்ணச் சென்ற மாணவர்களை ஏ.பி.வி.பி. அமைப்பினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதியில், ராம நவமியையொட்டி அசைவ உணவு சமைக்க ஏ.பி.வி.பி அமைப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அசைவ உணவு சமைக்கப்பட்டது. அதனை உண்ண சென்ற மற்ற மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பு மாணவர்கள் தடுத்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி சாப்பிட சென்றவர்களை தாக்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனால், ஜே.என்.யூ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், ஏ.பி.வி.பி. அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி, மற்ற அமைப்பு மாணவர்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்