பிரதமர் மோடியுடன் ரஷ்ய அமைச்சர் சந்திப்பு

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் பிரதமர் மோடியை சந்தித்தார்.

Update: 2022-04-02 03:30 GMT
முன்னதாக செர்கெய் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதங்கள் உள்ளிட்ட வேறேதும் வாங்க விரும்பினால், இது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம் செய்தால் மகிழ்ச்சியே என்று தெரிவித்த செர்கெய் லவ்ரோவ், இந்தியா தங்களிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை அமெரிக்க விரும்பாது என குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க அழுத்தத்தால் இந்திய, ரஷ்யா உறவு எவ்விதத்திலும் பாதிக்காது என்றும், ஆனால் அமெரிக்கா பல நாடுகளையும் தனது அரசியல் கொள்கையைப் பின்பற்றுமாறு நிர்பந்தித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதிபர் புதினும் இந்தியப் பிரதமர் மோடியும் தொடர்ந்து பேசி வருவதாக செர்கெய் கூறினார். இதனையடுத்து பிரதமர் மோடியை செர்கெய் சந்தித்தார். அதேவேளை கடந்த சில வாரங்களில் பிரிட்டன்,சீனா, ஆஸ்திரியா, க்ரீஸ், மெக்சிகோ நாடுகளில் இருந்து முக்கியத் தலைவர்கள் இந்தியா வந்த போது அவர்கள் யாரையுமே பிரதமர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்