இனி விமான ஓட்டிகள் 'ஆலு போஸ்தா' சாப்பிட தடை ? - வெளியான காரணம்
விமான ஓட்டிகள், கேபின் பணியாளர்கள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு போதை மருந்து சோதனை கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
விமான ஓட்டிகள், கேபின் பணியாளர்கள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு போதை மருந்து சோதனை கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 10 சதவீத விமான ஓட்டிகள் மற்றும் கண்ட்ரோலர்களுக்கு இது செய்யப்படும். கொல்கொத்தாவில் மிகப் பிரபல தின்பண்டமான ஆலூ போஸ்தோவில் கசகசா சேர்க்கப்படுவதால், அதை இனி விமான ஓட்டிகள் மற்றும் பணியாளர்கள் சாப்பிட முடியாது. கசகசா என்பது அபின் செடியின் விதைகள் தான். இதைக் கொண்டு செய்யப்படும் தின்பண்டங்களை சாப்பிட்டால், போதை மருந்து சோதனைகளில், உடலில் தடை செய்யப்பட்ட வேதியல் பொருட்கள் இருப்பதாக காட்டும் என்று கூறப்படுகிறது. எனவே இனி கொல்லொத்தாவைச் சேர்ந்த விமான ஓட்டிகள், ஆலு போஸ்தோவை சாப்பிட முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால் விமான ஓட்டிகளுக்கு இது தடை செய்யப்படாது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.