சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்...
14 மாநிலங்களில் காலியாக இருந்த 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின.
அதன்படி, ஆந்திராவில் நடைபெற்ற ஒரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல், அசாமில் 5 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஆளும் கட்சியான பாஜக 3 இடங்களிலும், ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பீகாரில் 2 இடங்களில் நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஹரியானாவில் ஒரு இடத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், இந்திய தேசிய லோக் தளம் வெற்றி பெற்றுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளது.
கர்நாடகாவில் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், 3 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக 2 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மேகாலயாவில் 3 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், தேசிய மக்கள் கட்சி 2 இடங்களையும், ஐக்கிய ஜனநாயக கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
மிசோரத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், மிசோ தேசிய முன்னணியும்,
நாகலாந்தில் நடைபெற்ற ஒரு தொகுதிக்கான தேர்தலில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் நடைபெற்ற 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
தெலங்கானாவில் ஒரு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில்,
மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.