கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார் - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார் - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

Update: 2021-10-05 04:32 GMT
கல்லூரி மாணவிகளை தீவிரவாதத்திற்கு இழுப்பதாக புகார்  - பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் 

கேரளாவில் கல்லூரி வளாகங்களில்  மாணவிகளை தீவிரவாத செயல்களுக்கு இழுக்கும் நடவடிக்கை நடைபெறவில்லை என கேரள முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.கேரளாவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் லவ் ஜிகாத், நார்கோட்டிக் ஜிகாத் திட்டங்களின் மூலம் இளையோரை இழுத்து வருவதாக பாலா மாவட்ட பிஷப் பேசியது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்தார். அப்போது, கேரளாவில் கல்லூரி வளாகங்களில்  மாணவிகளை தீவிரவாத செயல்களுக்கு இழுக்கும் நடவடிக்கை நடைபெறவில்லை என கூறினார். உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் கூறியதோடு, மத ரீதியிலான தவறான செய்திகளை வெளியிட்டு கலவரத்தை ஏற்படுத்த  சில ஆன்லைன் ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக உளவுத்துறையும்  சைபர் பிரிவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஆன்லைன் ஊடகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்