வன்முறையில் முடிந்த விவசாயிகள் போராட்டம்: கார்கள் எரிப்பு - 8 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் அமைச்சர் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

Update: 2021-10-04 09:21 GMT
போராட்டம், வன்முறை, உயிரிழப்பு... இப்படி உத்தரபிரதேசத்தில் அரங்கேறிய கோர நிகழ்வு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் ஞாயிறன்று அரசு விழாவில் பங்கேற்பதற்காக லக்கிம்பூர் சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராட்ட பகுதிக்குள் அமைச்சர்கள் சென்ற கார் நுழைந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்