கலவரத்தில் 8 பேர் உயிரிழந்ததால் பதற்றம்: வெளிமாநில முதலமைச்சர்கள் வர தடை
உத்திரபிரதேசம் கலவரத்தால் பதற்றம் நிலவுவதால், எதிர்கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் லக்னோ வர மாநில அரசு தடை விதித்துள்ளது.
லகிம்பூர் கேரில் விவசாயிகளின் போராட்டத்தின் அமைச்சரின் கார் மோதியதில் வெடித்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவ, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சத்தீஸ்கர் முதலமைச்சரும், பஞ்சாப் துணை முதலமைச்சரும் உத்திரபிரதேசம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், வன்முறையால் 144 தடை உத்தரவு அமலில் இருக்க, சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக லக்னோ விமான நிலையத்தில் வெளிமாநில முதலமைச்சர்களை அனுமதிக்க வேண்டாம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.