வெளிநாடுகளில் முறைகேடாக முதலீடு - சச்சின் பெயர் இடம்பெற்றதால் சர்ச்சை

அன்னிய நாடுகளில் சட்டவிரோத முதலீடு மற்றும் சொத்து குவிப்பு பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் அனில் அம்பானியின் பெயர்கள் இடம்பெற்று அதிர்ச்சி அளித்துள்ளன.

Update: 2021-10-04 06:32 GMT
அன்னிய நாடுகளில் சட்டவிரோத முதலீடு மற்றும் சொத்து குவிப்பு பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் அனில் அம்பானியின் பெயர்கள் இடம்பெற்று அதிர்ச்சி அளித்துள்ளன. கடந்த 2015ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி  உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியதை போன்று தற்பொழுது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு, உலகளவில் நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த 11 புள்ளி 9 மில்லியன் ஆவணங்களை 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை கொண்டு புலனாய்வு செய்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தது மற்றும் முதலீடு செய்தவர்களின் பட்டியலில் இந்தியா உட்பட 91 நாடுகளை சேர்ந்த  தலைவர்கள், அரசியல் புள்ளிகள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் மட்டும் முன்னணி ஊடகங்களை சேர்ந்த150 பத்திரிகையாளர்கள் மூலம் பெறப்பட்ட  புலனாய்வு தகவலில் குறைந்தபட்சம் 6 அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, நிரவ் மோடியின் சகோதரி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டுள்ளன.






Tags:    

மேலும் செய்திகள்