வன்முறையில் 8 பேர் உயிரிழந்த பரிதாபம் - பாதிக்கப்பட்டோரை சந்திக்க சென்ற பிரியங்கா
உத்திரபிரசத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர்.
உத்திரபிரசத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். உத்திரபிரதேசத்தின் லகிம்பூர் கேர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அமைச்சரின் கார் மோதியது. அதனால் வெடித்த கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த, வன்முறை நடத்தப்பட்ட லகிம்பூர் கேரி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க லக்னோ வந்த பிரியங்கா காந்தி, அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்றார். அவரை கிராமத்திற்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து வீட்டு காவலில் வைத்தனர். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் டிவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.