கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை - 6 வயது சிறுவன் சுத்தியால் அடித்து கொலை
கேரள மாநிலத்தில் இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவன் சுத்தியாலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 6 வயது சிறுவன் சுத்தியாலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அணச்சல் பகுதியை சேர்ந்த சஃபியா மற்றும் அவருடைய சகோதரியின் கணவர் ஷாஜஹானின் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் ஷாஜஹான் சுத்தியுடன் சஃபியா வீட்டிற்குள் நுழைந்து, ஆறு வயது சிறுவன் ரியாஸ் மஞ்சில் அல்தாப்பை சுத்தியால் தலையில் அடித்துள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் சஃபியா மற்றும் அவரது தாயரையும் ஷாஜஹான் தாக்கியுள்ளார். சஃபியாவின் 15 வயது மகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் ஷாஜஹான் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலயைில், சஃபியா மற்றும் அவரது தாயார் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.