கப்பலில் போதை விருந்து - பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் கைது?

மும்பையில் உல்லாச கப்பலில் போதை விருந்து நடத்திய விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 3 பெண்கள் உள்ளிட்ட 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-03 07:27 GMT
மும்பையில் உல்லாச கப்பலில் போதை விருந்து நடத்திய விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 3 பெண்கள் உள்ளிட்ட 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் முதல் அதிநவீன உல்லாச கப்பல் என்ற பெருமையுடன் 2 வாரங்களுக்கு முன்பு  "எம்பிரஸ்" தனது கடல் பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் போதை விருந்து நடப்பதாகவும் அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளதகாவும் பொருள் ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தனி படகு ஒன்றில் சென்ற போலீசார், எம்பிரஸ் கப்பலில் சோதனை செய்தனர். அப்போது விருந்தில் பங்கேற்று இருந்தவர்கள் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி இருந்தது தெரிய வந்ததால் அங்கு 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன், 3 பெண்கள் மற்றும் பிரபல தொழில் அதிபர்களின் வாரிசுகள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போதைப்பொருள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் பிரபல பாலிவுட் நடிகரின் மகன் சிக்கி இருப்பதாக வெளியான தகவலை அவர் உறுதிப்படுத்து மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை நேரில் ஆஜராக போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்