பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம்: ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அவரது பயணத்தின் முக்கியத்துவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக, வரும் வெள்ளிக்கிழமை குவாட் மாநாட்டிலும், 25-ஆம் தேதி ஐ.நா பொதுச்சபை கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
குவாட் மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நிலைப்பாடு, தீவிரவாத ஒழிப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். மேலும், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் ஐ.நா சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜோ பைடன் உடனான சந்திப்பில் இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களின்
பிரதிநிதிகளை சந்திக்கும் பிரதமர், இந்தியாவில் தொழில்
தொடங்க அழைப்பு விடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.