"கடற்கரை கால்பந்து போட்டி ஊக்குவிக்கப்படும்" - கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்
பெண்கள் கால்பந்து மற்றும் கடற்கரை கால்பந்து போட்டிகள் ஊக்குவிக்கப்படும் என கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் டிராபி இறுதிப்போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான், சந்தோஷ் டிராபி போட்டி தொடர்பான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புடன் இணைந்து கேரள விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என கூறிய அமைச்சர், 16 வயதுக்குட்பட்டோர்களுக்கான கால்பந்து முகாம் கேரளாவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.