வழக்கறிஞர்களுக்கு இழப்பு கேட்ட வழக்கு - மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்

வழக்கறிஞர்களுக்கு இழப்பு கேட்ட வழக்கு - மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்

Update: 2021-09-14 10:57 GMT
வழக்கறிஞர்களுக்கு இழப்பு கேட்ட வழக்கு - மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் 

வழக்கறிஞர்களுக்கு இழப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம், கருப்பு அங்கி அணிவதால் விதிவிலக்கு அளிக்க முடியாது என கண்டனம் தெரிவித்தது. வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் தாக்கல் செய்த பொதுநல மனுவில் 60 வயதிற்குள் இறக்கும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சம் 50 லட்சம் ரூபாயை இந்திய பார்கவுன்சில் அல்லது மாநில பார்கவுன்சில் வழங்க உத்தரவிடும்படி கேட்டு கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், கருப்பு அங்கி அணிந்தால் வழக்கறிஞர்களின் உயிர் விலைமதிப்பற்றது என கூறிட முடியாது என்றதுடன், விளம்பரம் தேடுவதற்காக இது போன்ற மனு தாக்கல் செய்யப்பட்டதா கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்