தொழில்முறை கால்பந்தாட்ட தொடரான இந்தியன் லீக் தொடரில் விளையாட இன்பநிதி தொடர்

இந்தியாவின் முக்கிய தொழில்முறை கால்பந்தாட்ட தொடரான இந்தியன் லீக் தொடரில் விளையாட, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதியின் மகனுமான இன்பநிதி தேர்வாகி உள்ளார்

Update: 2021-08-28 05:51 GMT
ஐ-லீக் என அழைக்கப்படும் இந்தியன் லீக் கால்பந்து தொடர், இந்தியாவின் மிக முக்கியமான தொழில்முறை கால்பந்து தொடராக பார்க்கப்படுகிறது. 

21 கிளப் அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின், 2020 - 2021ஆம் ஆண்டுக்கான சீசனில், கோகுலம் கேரளா எஃப்சி அணி வெற்றிபெற்றது. 

இந்நிலையில், ஐ-லீகின் அடுத்த தொடருக்கான வீரர்கள் தேர்வு, நடைபெற்று வருகிறது. 

இதில், மணிப்பூரை தலைமையிடமாக கொண்ட நெரோகா எஃப்சி என்ற கால்பந்து அணியில் விளையாட, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதியின் மகனுமான இன்பநிதி தேர்வாகி உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை, நெரோகா எஃப்சி அணி வெளியிட்டுள்ளது. 

கால்பந்து விளையாட்டில், டிஃபெண்டராக விளையாடி வரும் இன்பநிதி, சென்னையில் உள்ள மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வருகிறார். 

கடைசியாக நடந்துமுடிந்த ஐ-லீக் தொடரில் கடைசி இடத்தை பிடித்த நெரோகா எஃப்சி அணி, இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திறமையான வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாகவே, இன்பநிதியின் தேர்வு பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்