9 நீதிபதிகள் நியமனம் - குடியரசு தலைவர் ஒப்புதல்
உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் உள்பட 8 நீதிபதிகளையும், ஒரு மூத்த வழக்கறிஞரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியில், காலியாக இருக்கும் 9 இடங்களை நிரப்பும் வகையில் 8 நீதிபதிகள், ஒரு வழக்கறிஞர் பெயர்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜீயம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பரிந்துரைத்தது. தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெற்றிருந்தது. நீதிபதிகள் அல்லாத ஒருவராக மூத்த வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பி.எஸ். நரசிம்மா பெயர் இடம்பெற்றிருந்தது.
கொலிஜீயத்தின் இந்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்