163 உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணை

நாடு முழுவதும்163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாக, உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-25 09:42 GMT
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்கக் கோரி  வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், நாடுமுழுவதும் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் 122 பேருக்கு எதிரான வழக்குகளை அமலாக்கத் துறையும்,

163 உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை சிபிஐயும்  விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 நீதிமன்றங்களில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக 380 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்குகளில் தீர்வு காணப்படுவது மிக குறைவாக உள்ளதாக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்