செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம்: "விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பெகாசஸ் உளவு விவகாரத்தில் விரிவான விளக்கம் தேவை என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-17 13:33 GMT
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல், நாட்டின் பாதுகாப்பை போல் மக்களின் உரிமையும் முக்கியம் என எடுத்துரைத்தார். செல்போன் ஒட்டு கேட்பு விஷயத்தில் மத்திய அரசின் பிரமாண பத்திரமே போதுமானது என்றும் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை நிபுணர் குழுவிடம் தெரிவிப்போம் எனவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு விளக்கம் அளிக்க ஆணையிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைத்ததுடன், நிபுணர் குழு அமைப்பது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை, பின்னர் முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்